சொந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக வில்லனாக மாறிய ஹீரோ!

0

வருகிற வாய்ப்பையெல்லாம் வாய்க்கொழுப்பால் உதறித் தள்ளிவிட்டு சொந்தப் படம் எடுத்த ஹீரோ அதை ரிலீஸ் செய்ய முடியாமல் அவதிப்படுகிறாராம். சின்ன சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்த சிம்ம நடிகர் வில்லனாக ஒரு படத்தில் தேசிய விருது பெற்ற பின்னர் புகழின் உச்சிக்கு போனார். ஆனால் நடிகர் நடந்துகொண்ட விதம் அவரை அப்படியே கீழே இறக்கியது. வரிசையாக தோல்விகளைக் கண்டவர் அவசரப்பட்டு சொந்தப்பட தயாரிப்பிலும் இறங்கினார். அந்த படத்தை இன்னும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. விளைவு இப்போது வில்லனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். சேது நடிகரைத் தொடர்ந்து ஒரிஜினல் சேது நடிகருக்கும் வில்லனாக நடிக்கிறாராம். அப்படியாவது காசு சேர்த்து படத்தை ரிலீஸ் பண்ணட்டும்.

Share.

About Author

Leave A Reply