ஜோடியாக சென்று தனித்தனியாக வீடு திரும்பிய ஐஸ்வர்யாராய் – அபிஷேக்பச்சன்

0

விடுமுறையை கழிக்க அமெரிக்காவுக்கு ஜோடியாக சென்ற ஐஸ்வர்யாராய் – அபிஷேக்பச்சன், தனித்தனியாக வீடு திரும்பியதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவியது.

இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் அவர் கணவர் அபிஷேக் பச்சன் மகள் ஆரத்யா விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்கா சென்றனர். இவர்களுடன் ஐஸ்வரியாராயின் தாயார் விருதாராயும் சென்றார்.

ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் தங்கி விடுமுறையை களித்தனர். அங்கு சொகுசு பங்களா ஒன்றையும் வாங்கி உள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு துபாயில் ரூ. 54 கோடி மதிப்பில் ஒரு பங்களா உள்ளது. அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கி இருந்த அபிஷேக்பச்சன் முதலில் தனியாக மும்பை திரும்பினார்.

சில நாட்களுக்குப்பிறகு ஐஸ்வர்யாராய் தனது தாய், குழந்தை ஆகியோருடன் நாடு திரும்பினார். கணவன், மனைவி இருவரும் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டு தனித்தனியாக திரும்பியதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவியது.

ஆனால் அப்படி எதுவும் இல்லை. அபிஷேக்பச்சனுக்கு அவசர வேலை இருந்ததால் அவர் முதலில் மும்பை வந்தார். ஐஸ்வர்யா ஏற்கனவே திட்ட மிட்ட நாளில் ஊர் திரும்பினார் என்று தெரிவித்துள்ளனர்.

Share.

About Author

Leave A Reply