`பாகுபலி 2′ நாயகனுக்கு ராஜமவுலி கொடுத்த பரிசு

0

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் `பாகுபலி 2′. நாளை மறுநாள் (ஏப்ரல் 28-ஆம் தேதி) உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்க உள்ளது. மேலும் கூடுதல் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாக உள்ளது.

பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், `பாகுபலி 2′ ரிலீசாவதற்கு முன்பாகவே ரூ.438 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்னமும் மாபெரும் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், `பாகுபலி’ நாயகன் பிரபாஸீக்கு, இயக்குநர் ராஜமவுலி பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். 5 வருடங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் ஒரே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவர் பிரபாஸ். எனவே பிரபாஸை பலமேடைகளில், பலமுறை ராஜமவுலி பாராட்டியிருக்கிறார். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் விதமாக, `பாகுபலி’ படத்தில் பிரபாஸ் பயன்படுத்திய போர் கவசம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

`பாகுபலி 2′ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Awesome
Share.

About Author

Leave A Reply