முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் அருண் விஜய்

0

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அருண் விஜய்க்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது. அதை தொடர்ந்து வெளிவந்த குற்றம்-23 கூட சூப்பர் ஹிட்டானது.

இதை தொடர்ந்து மகிழ்த்திருமேணி இயக்கத்தில் இவர் நடித்து வருகின்றார், இவர் இயக்கத்தில் ஏற்கனவே தடையற தாக்க நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து அருண் விஜய் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

கௌதம் மேனனும் பல மேடைகளில் அருண் விஜய்யை சோலோ ஹீரோவாக ஒரு படம் இயக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் அருண் விஜய்யின் 25-வது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share.

About Author

Leave A Reply